சம்மாந்துறையில் மூன்றாவது நாளாக உயிருக்குப் போராடும் காட்டு யானை: தொடரும் தீவிர மருத்துவ மற்றும் மீட்புப் பணிகள்!

A. R. M. Majeed
0

 


மஜீட். ARM 


​அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சேகப்பற்று பகுதியிலுள்ள வயல் பகுதியில், கடந்த புதன்கிழமை (21) திகதி அன்று 15 வயது மதிக்கத்தக்க காட்டு யானை ஒன்று சுகயீனமற்ற நிலையில் சேற்றில் வீழ்ந்து கிடந்தது.


​வயல்வெளியின் சேற்றுப் பகுதியில் எழ முடியாமல் வீழ்ந்து கிடக்கும் இந்த யானையின் உயிரைப் பாதுகாத்து, அதனை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதற்காக யானையின் உயிரைக் காப்பாற்றும் முயற்சியில் வனஜீவராசிகள் திணைக்களத்தின் மருத்துவப் பிரிவினரும் அதிகாரிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 


​தொடர் மழையும் குளிரும் நிறைந்த கடினமான சூழ்நிலையிலும், யானையின் உடல்நிலையை உன்னிப்பாகக் கவனித்து வரும் வனஜீவராசிகள் திணைக்களத்தின் மருத்துவப் பிரிவினரும் அதிகாரிகளும் அதற்குத் தேவையான முதலுதவி மற்றும் புத்துணர்ச்சியூட்டும் சிகிச்சைகளை வழங்கி வருகின்றனர். 


மேலும், மூன்று நாட்களாகச் சேற்றில் முடங்கியிருப்பதால் ஏற்பட்டுள்ள உடல் பலவீனத்தைப் போக்கி, யானையைச் சேற்றிலிருந்து பாதுகாப்பாக வெளியே கொண்டுவரும் மீட்புப் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.


​வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தின் வளத்தாப்பிட்டி களப் பாதுகாப்புப் படைப் பிரிவு அலுவலகத்தின் பொறுப்பதிகாரி எம்.ஜி. அஜித் குணரத்ன விடுத்த அவசரக் கோரிக்கைக்கு அமைவாக, சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் குறித்த யானைக்கான சிகிச்சை மற்றும் மீட்புப் பணிகளுக்குத் தேவையான முழுமையான ஒத்துழைப்புகளை வழங்கியுள்ளார்.


​இதற்கமைய, பாதிக்கப்பட்ட யானைக்குத் தங்கு தடையின்றி அவசரச் சிகிச்சைகளை அளிப்பதற்குத் தேவையான கூடார வசதிகள் மற்றும் யானையை மீட்கும் பணிகளுக்கான கனரக வாகன வசதிகள் சம்மாந்துறை பிரதேச சபையினால் உடனடியாக ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.








Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top