சம்மாந்துறையில் உயிருக்குப் போராடும் காட்டு யானை மருத்துவப் பணி,மழையையும் எதிர்கொள்ள களத்தில் இறங்கிய ராணுவம்!

A. R. M. Majeed
0

 


​மஜீட். ARM


​சம்மாந்துறை பகுதியில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற்றுவரும் காட்டு யானையின் நலனைக் கருத்திற்கொண்டு, அப்பகுதியில் மழை காலங்களில் ஏற்படக்கூடிய அசௌகரியங்களைத் தவிர்க்கும் வகையில் துரித நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


​சிகிச்சை அளிக்கும் பிரதேசம் மழை காரணமாகச் சேறும் சகதியுமாக மாறுவதைத் தடுப்பதற்காக, வீரமுனை 24 வது படைப்பிரிவு இராணுவத்தினரும், வனவிலங்கு அதிகாரிகளும் இணைந்து அப்பகுதியில் மணல் மற்றும் மணல் மூட்டைகளை நிரப்பி தளத்தை அமைத்துள்ளனர்.


​யானைக்கான மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் எவ்விதத் தடையுமின்றி தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்கும், சேறு காரணமாக யானைக்கும் மருத்துவக் குழுவினருக்கும் ஏற்படும் சிரமங்களைக் குறைப்பதற்கும் இந்த உடனடிப் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு ஏற்பாடுகள் பெரிதும் உறுதுணையாக அமைந்துள்ளன.


யானையின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், உரிய நேரங்களில் சிகிச்சைகளை வழங்கவும், அதன் உடல்நிலையில் ஏற்படும் மாற்றங்களைக் கண்காணிக்கவும் வனவிலங்கு அதிகாரிகள் இரவு பகலாகச் சம்பவ இடத்தில் தங்கியிருந்து பணியாற்றி வருகின்றனர். வனவிலங்கு அதிகாரிகள், மருத்துவக் குழுவினர் மற்றும் பாதுகாப்புப் பிரிவினர் இணைந்து வெளிப்படுத்தி வரும் இந்த மனிதநேயப் பணியும், அர்ப்பணிப்பும் எப்போதுமே பாராட்டத்தக்கதாகும்.






Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top