சியம்பலங்கமுவ தாலக் கொம்பனுக்கு தொடர்ந்தும் சிகிச்சை: காயம் ஆறிவரும் நிலையில் அஜீரண கோளாறுக்கும் சிகிச்சை!

A. R. M. Majeed
0

 



மஜீட். ARM 


​சியம்பலங்கமுவ பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்திருந்த தாலக் கொம்பனுக்கு இன்று (12) வனவிலங்கு கால்நடை வைத்தியர்களின் மேற்பார்வையின் கீழ் தம்புத்தளைப் பகுதியில் தொடர்ச்சியாகச் சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளன.


​பண்டுலபுர, லுணுகம்வெகெர, ரந்தெணிவல மற்றும் நிகவெரட்டிய ஆகிய வனவிலங்கு கால்நடை வைத்தியர்களின் வழிகாட்டலின் கீழ் இந்தச் சிகிச்சை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


​இதன்போது யானையின் பிரதான காயம் ஆறிவருவது அவதானிக்கப்பட்டுள்ளதுடன், எனினும் யானை சற்று அஜீரணக் கோளாற்றால் பாதிக்கப்பட்டுள்ளமை கால்நடை வைத்தியர்களால் கண்டறியப்பட்டுள்ளது. அதற்கான அவசியமான மருத்துவச் சிகிச்சைகளும் தற்போது தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றன.








Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top