மல்வத்தை விபுலானந்தா மகா வித்தியாலயத்தில் விமரிசையாக நடைபெற்ற சிறுவர் தின நிகழ்வு 2026

A. R. M. Majeed
0



மஜீட். ARM 


​கமு / சது / விபுலானந்தா மகா வித்தியாலயத்தில் இவ்வாண்டுக்கான சிறுவர் தின நிகழ்வு “மனதில் வலிமை, பலப்படுத்தப்பட்ட சிறுவர்கள்” என்ற சிறப்புத் தொனிப்பொருளின் கீழ் பாடசாலை அதிபரின் தலைமையில் மிகவும் விமரிசையாகவும் சிறப்பான முறையிலும் இன்று (01) நடைபெற்றது.


​மாணவர்களின் மனவலிமை, தன்னம்பிக்கை, படைப்பாற்றல் மற்றும் ஆளுமைப் பண்புகளை வளர்க்கும் வகையில் திட்டமிடப்பட்ட இந்நிகழ்வில், பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றன. பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் மற்றும் கல்விசாரா ஊழியர்களின் அர்ப்பணிப்பான ஒத்துழைப்புடன் நிகழ்வுகள் மிகச்சிறப்பாக முன்னெடுக்கப்பட்டன.


​மாணவர்களின் உள்ளார்ந்த திறமைகளை வெளிக்கொணரும் முகமாக பல்வேறு போட்டி நிகழ்வுகள் மற்றும் வீதி நாடகங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதில் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். 


போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், அவர்களின் சாதனைகளும் பாடசாலைச் சமூகத்தால் பாராட்டி ஊக்கப்படுத்தப்பட்டன.

​சிறுவர்களின் மகிழ்ச்சியையும், அவர்களது திறமைகளையும் வலுப்படுத்தும் இத்தகைய நிகழ்வுகள் மாணவர்களின் எதிர்கால ஆளுமை வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன.


 இந்நிகழ்வை வெற்றிகரமாக நடத்திட உழைத்த அனைத்து ஆசிரியர் குழாம் மற்றும் பணியாளர்களுக்குப் பாடசாலைச் சமூகம் தனது மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டதுடன், அனைத்து மாணவச் செல்வங்களுக்குமான தனது இனிய சிறுவர் தின நல்வாழ்த்துக்களையும் உரித்தாக்கியுள்ளது.

​“வலிமையான மனங்களே, வளமான எதிர்காலத்தை உருவாக்குகின்றன!”

​












Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top