மஜீட். ARM
அம்பாறை மாவட்ட தேசிய விளையாட்டு விழாவில், சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவின் சார்பில் கலந்துகொண்ட "மல்வத்தை விபுலானந்தா " பாடசாலை மாணவர்கள் இரு தங்கப் பதக்கங்களை வென்று மாகாண மட்டப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனர்.
விளையாட்டுத்துறை அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெற்ற இத்தொடரில், குறித்த பாடசாலையைச் சேர்ந்த M. சஹாணி உயரத் தாண்டுதலில் தங்கப் பதக்கத்தையும், A. தக்ஸிகா ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கத்தையும் வென்று அசத்தியுள்ளனர்.
மாணவர்களின் இந்தச் சாதனை பாடசாலைக்கும், ஆசிரியர்களுக்கும், பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளதுடன், மாகாண மட்டப் போட்டியிலும் சிறந்த பெறுபேறுகளைப் பெற பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.மேலும், இப் போட்டிகளில் கலந்து கொள்வதற்கு வாய்ப்பினை வழங்கிய சம்மாந்துறை பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் S. சுலக்சன் அவர்களுக்கும் பாடசாலை நிர்வாகம் சார்பாக நன்றிகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.





