குடும்பத் தகராறு முற்றிய நிலையில், கணவன் மேற்கொண்ட கொடூரத் தாக்குதலுக்கு இலக்காகி 29 வயதுடைய இளம் மனைவி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
அரலகங்வில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிம்பொகுண பிரதேசத்தில் நேற்று (03) இரவு இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கணவனால் பலமாகத் தாக்கப்பட்ட பெண், படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு அரலகங்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் மற்றும் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் அரலகங்வில, பிம்பொகுண பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய பெண்ணாவார்.
இந்தக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரான கணவன் தப்பியோடியுள்ள நிலையில், அவரைக் கைது செய்வதற்கான வலைவீச்சினை அரலகங்வில பொலிஸார் தீவிரப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது
