சாஹிப் மரைக்கார்
இறக்காமம் கல்விக் கோட்டத்தில் காணப்படும் கமு/சது/அமீர் அலிபுரம் பாடசாலையில் தரம் 9 இல் கல்வி பயிலும் மாணவன் ஏ.ஏ. ஒமர் சயாப் (A.A. Omar Sayaf) அண்மையில் நடைபெற்ற தேசிய மட்ட சமூக விஞ்ஞானப் போட்டியில் (National Social Science Competition) பங்குபற்றி மிகச்சிறந்த வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.
இந்த வெற்றியின் மூலம் பாடசாலைக்கும், சமூகத்திற்கும் பெரும் புகழைத் தேடித்தந்துள்ள மாணவன் ஒமர் சயாப் அவர்களைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று காலை பாடசாலை அதிபர் திரு.M.I. ஜௌபர் அவர்களின் தலைமையில் விசேட ஆராதனை நிகழ்வின் போது நடைபெற்றது.
இந்த மாணவனின் வெற்றிப்பயணம் தொடரவும், எதிர்காலத்தில் இன்னும் பல சாதனைகளை நிலைநாட்டவும் பாடசாலை சமூகம் சார்பாகப் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.

