டெங்கு அபாயத்தைக் கட்டுப்படுத்த புதிய வழிமுறைகள்: ஜனாதிபதி செயலகத்தில் விசேட கலந்துரையாடல்!

0

 டெங்கு அபாயத்தைக் கட்டுப்படுத்த புதிய வழிமுறைகள்: ஜனாதிபதி செயலகத்தில் விசேட கலந்துரையாடல்!


நாட்டில் நிலவும் டெங்கு தொற்று அபாயத்தைக் கட்டுப்படுத்துவதற்காக வெளியிடப்பட்ட விசேட சுற்றறிக்கையை நடைமுறைப்படுத்துவதன் முன்னேற்றம் குறித்த முக்கிய கலந்துரையாடல் ஒன்று இன்று (03) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.

2026 ஜூன் 23 அன்று வெளியிடப்பட்ட சுற்றறிக்கைக்கு அமைய, அனைத்து அரச நிறுவனங்களும் முன்னெடுத்த திட்டங்களின் தற்போதைய முன்னேற்றம் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

இந்த விசேட சந்திப்பில் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க, தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர, 'கிளீன் ஸ்ரீலங்கா' செயலகத்தின் அதிகாரிகள், சுகாதாரத் துறை பிரதானிகள் மற்றும் பாதுகாப்புத் துறை தலைவர்கள் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்










Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top