மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பெய்துவரும் கடும் மழை காரணமாக பல இடத்தில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது இலங்கையில் தென்கிழக்கே நிலவிய சுழற்றசியானது தாழ்வுப்பகுதியை அண்டிய பகுதிகளிலும் நீடித்த மழையினை எதிர்பார்க்க முடியும் என வானிலை திணைக்களம் அறிவித்துலும் இன்று [18.02.2026]காலை 8.30 மணிவரையிலும் கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டக்களப்பு நகரில் 128.9 மில்லி மீட்டர் மலை வீழ்ச்சி பதிவாகியுள்ளது மாவட்ட வானிலை நிலையம் தெரிவித்துள்ளது இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக பெய்துவரும் அடைமழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.மட்டக்களப்பு நகரத்தில் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதை காணமுடிகின்றது.
அத்துடன் தொடர்ந்து மழை பெய்து வருவதன் காரணமாக மட்டக்களப்பின் சில வீதிகளும் வெள்ளத்தில் மூழ்கும் நிலைமை காணப்படுகின்றது.
இதேநேரம், தொடர்ந்து பெய்துவரும் கடும் மழை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் அறுவடை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளது.மேலும் அறுவடைகளை முன்னெடுத்த விவசாயிகள் பெரும் இன்னல்களுக்கு முகம் கொடுத்துள்ளனர் .

