2026 ஆம் நிதியாண்டு தொடர்பாக ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் (Budget) சுகாதார சேவை மற்றும் வைத்தியர்களின் பிரச்சினைகளுக்கு முறையான தீர்வொன்றை காணத் தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) இன்று (17) 8. 00 AM மணி முதல் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளது.
இதற்கமைய வைத்தியசாலை மருத்துவ பரிசோதனையின் போது வைத்தியசாலையில் கிடைக்காத மருந்துகளைப் பெருவதற்கு நோயாளிகளுக்கு மருந்துச் சீட்டுகளை வழங்காமை, ஆய்வக சோதனைகளை வெளிப்புறமாக நடத்துவதற்கு பரிந்துரைகளை வழங்காமை, தினசரி மருத்துவ பரிசோதனைகளை தவிர மேலதிகமான எந்தவொரு பரிசோதனையிலும் கலந்து கொள்ளாமை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்த தொழிற்சங்க நடவடிக்கையில் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

