நாட்டில் தேங்காயின் விற்பனையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகத் தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இதன்படி, வாராந்த தேங்காய் ஏல விற்பனையில், 0.12 சதவீதம் விற்பனை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகக் தெரிவிக்கப்படப்பட்டுள்ளது.
உள்நாட்டு சந்தையில் பெரிய தேங்காய் ஒன்றின் மொத்த விலையானது 175 முதல் 185 ரூபாயாகவும், சிறிய தேங்காய் ஒன்றின் மொத்த விலையானது 150 முதல் 160 ரூபாயாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, தேங்காய் விற்பனையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

