கேரளா கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது வரிப்பத்தான் சேனை பகுதியில் சம்பவம்

0

 


இறக்காமம் பொலீஸ் புலனாய்வு பிரிவினரால் வழங்கப்பட்ட இரகசிய தகவலுக்கு அமைவாக இறக்காமம் பொலிஸ் பொறுப்பதிகாரி மஹிந்த சேனரத்ன அவர்களுடைய தலைமையிலான விசேட குழுவின் சுற்றி வளைப்பின் போது இறக்காமம் போலீஸ் பிரிவுக்குட்பட்ட வரிப்பத்தான் சேனை வெடிக்காரன் வீதி பகுதியில் நேற்று நள்ளிரவு 11.30 மணி அளவில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


குறித்த சந்தேக நபர்கள் 1991 ஆம் ஆண்டினை பிறப்பாண்டாக கொண்ட முஸ்லிம் சகோதரர் ஒருவரும் 1989 ஆம் ஆண்டினை பிறப்பு ஆண்டாக கொண்ட சிங்கள சகோதரர் ஒருவரும் இச் சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இவர்கள் இருவரது கை கைவசம் 1000,1000 மில்லி கிராம் கேரளா கஞ்சா வைத்திருந்ததாகவும் அவர் தெரிவித்தார்


குறித்த சந்தேக நபர்கள் இருவரும் அம்பாறை நீதமான நீதிமன்றத்தின் முன்னிலையில் இன்றைய தினம் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாகவும் அவர் எமது ஊடகத்துக்கு தகவல்களை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top