சம்மாந்துறை தில்சாத் பர்வீஸ்
ஊடகவியலாளர்
சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அஸ் ஸாலிஹாத் மகளிர் அறபுக் கல்லூரி பிரதேசத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (05) அதிகாலை 12.45 மணியளவில் கேஸ் சிலிண்டர் திருடிய சந்தேக நபரை பொதுமக்கள் கைது செய்து சம்மாந்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சென்னல்கிராமம் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடையவர் என பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

