ஊடகவியலாளர் S.M.Z சித்தீக் இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்டார்.

Dsa
0






அஸ்றம் காஸிம் 


இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத் தாபனத்தின் அம்பாறை பிராந்திய செய்தியாளரும் , "டுடே சிலோன்" ஊடக வலையமைப்பின் பிரதம செய்தி  ஆசிரியருமான S.M.Z சித்தீக் நேற்று இரவு 07.15 மணி அளவில் இனம் தெரியாத சிலரினால்  தாக்கப்பட்டார்.


குறித்த செய்தியாளருக்கு சொந்தமான இறக்காமத்தில் காணப்படும் "தாய்மடி" எனும் ஓய்வகத்திற்கு முன்பாக  மறைந்திருந்து பொல்லொன்றினால்  தாக்கிய போது தலைக்கவசம்  அணிந்திருந்ததனால் மயிரிழையில் உயிர் தப்பினார். 


குறித்த "தாய்மடி" எனும் ஓய்வகத்திற்கு அருகாமையிலும் அதனை அண்டியுள்ள இருள் நிறைந்த பகுதிகளில் இரவு வேளைகளில் மறைந்திருந்து மதுபானம் மற்றும் ஏனைய  போதை வஸ்துக்களை பயன்படுத்தி வருவதனால் இவற்றைத் தடுக்க வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளில் ஈடுபட்டு வரும் ஊடகவியலாளர் குறித்த இடத்தில் கடந்த 20 நாட்களுக்கு முன்பாக சிலர் மதுபானம் அருந்திக் கொண்டிருந்தபோது  அவர்களுக்கு முன் எச்சரிக்கையாக இவற்றை நிறுத்தாவிட்டால் பொலிசாரிடம் தங்களை  முறைப்பாடு செய்வேன் என கூறியிருந்தார். 


அதன் பின்னர் இரண்டு நாட்களுக்குப் பிறகு ஓய்வகத்தின் வளாகத்தில்  காணப்பட்ட மேசைகள் உடைக்கப்பட்டு விடுதியின் கூரைகளும் உடைக்கப்பட்டிருந்ததோடு வானொலிப் பெட்டியும் களவாடப்பட்டிருந்தது. இதன் பின்னரே நேற்று இரவு குழுவாக வந்த மூவர் இவர்  மீது   தாக்குதல் நடத்தி இருக்கின்றார்கள். 


இது ஊடகவியலாளர் S.M.Z சித்தீக் அவர்களுக்கு கொலை அச்சுறுத்தலாக மாறியுள்ள நிலையில் இவ்வாறு ஊடகவியலாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் மிலேட்சத்தனமான  தாக்குதல்கள் கண்டிக்கத்தக்க விடயமாகும். குறித்த நபர்களை இனம் கண்டு சட்டத்தின் முன் நிறுத்த வேண்டியது பொலிசாரின் பொறுப்பு வாய்ந்த கடமையாகும்.

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top