அக்கரைப்பற்று பெரியபள்ளிவாசலில் சிறுவர் பூங்கா திறந்துவைப்பு

Dsa
0

 


நூருல் ஹுதா உமர் 


கடந்த காலங்களில் அதிகளவான இளைஞர்கள் பள்ளிவாசலுக்கு வருகைதருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் பெற்றோர்களுடன் இணைந்து மேற்கொண்டோம். இன்றைய இளைஞர்கள் பள்ளிவாசலில் தொழாமல் இங்கு நடைபெறும் திக்ருகளை நாவினால் மொழியாமல், பாயான்களை (மார்க்க விடயங்களை) காது கொடுத்து கேட்காமல் நல்ல சமூதாயத்தை உருவாக்கிவிட முடியாது என அக்கரைப்பற்று ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் தலைவர் எஸ்.எம் சபீஸ் தெரிவித்தார் 



சிறுவர்களுக்கான விளையாட்டு பூங்கா அக்கரைப்பற்று பெரியபள்ளிவாசலில் இன்று திறந்து வைக்கப்பட்டது. இதன்போது கருத்து வெளியிட்ட அவர் அதேபோன்று சிறுவயது முதல் குழந்தைகளை  பள்ளிவாசலோடு இணைக்ககூடிய விதத்தில் இந்த பூங்கா உருவாக்கப்பட்டதாக தெரிவித்தார். மேலும் இப்பூங்கா அமைந்திட ஒத்துழைப்பு வழங்கிய ஜமாஅத்தினர் அதேபோன்று நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள்  அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top