ஆசிரிய பணியை அவல நிலைக்கு கொண்டு வரும் நிலை மாற வேண்டும்

Dsa
0



ஆசிரியம் (pedogogy) ஒரு வாண்மை நிறை பணியாகும். மனித உருவாக்கத்தின் மகத்தான பணியது.  


அரசியற் காரணிகள், ஒரு சில தரமற்ற ஆசிரியர்களின் கீழ்த்தரமான செயல்கள், கல்வித் துறை நிருவாகிகளினால் நடைபெறும் சீரழிவுகள் எனத் தொடரும் அவலங்களால் இப் பணி இன்று மக்கள் மத்தியில் தரம் தாழ்ந்து வருவது கவலையே. இதை நாம் ஒரு போதும் அனுமதிக்க கூடாது. 


இந்த பதிவிலே ஓர் உண்மைச் சம்பவத்தையே எழுதுகிறேன். எந்த தனிப்பட்ட மனோ நிலையிலும் இதை எழுத வில்லை. இது ஒரு சமூகப் பணி. இதை நாம் எல்லோருமே அறிய வேண்டும். மாணவர்க்குத் துரோகமிழைப்போர் தொடர்ந்தும் பாடசாலைச் சமூகத்தை ஏமாற்ற இடமளித்தல் கூடாது. குறித்த ஆசிரியரின் திருகு தாளங்கள், பணியிலே செய்யும் கேவலமான செயல்களை நான் எழுதி அசிங்கப் படுத்தும் எண்ணம் இல்லை.


"ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்"

உண்மைச் சம்பவம்:


அம்பாரை மாவட்டம், சம்மாந்துறைக் கல்வி வலயம், இறக்காமம் கல்விக் கோட்டம். ஓர் ஆங்கிலப் பாட ஆசிரியர் 2014 முதல் இன்று வரை ஒரே பாடசாலையில் கடமை ஆற்றுகிறார். அது இப் பிராந்தியத்தின் பெரிய பாடசாலை (1Ab). ஒரே பாடசாலையில் 10 வருடமும் தாண்டிய சேவை. அவருக்கு இடமாற்றம் வந்த போதெல்லாம் அரசியல்வாதிகளை நாடி இரத்துச் செய்வதே வழக்கமாக கொண்டவர். 


ஆங்கில பாடத்தில் இப் பாடசாலை இது வரை 12%, 14%, 21% என்ற சித்தி வீதங்களைத்  தாண்ட உழைக்க இவரால் முடிய வில்லை. பல 9A வர இருந்தாலும் இவரின் ஆங்கில பாடத்தில் A சித்தியைப் பெற முடியாமையால் ஒவ்வொரு வருடமும் பல 9A களை குறித்த அப் பாடசாலை இழந்தே வருகிறது. திறமையான பல மாணவர்களை இவர் வருடா வருடம் ஆங்கிலத்தில் நல்ல பெறுபேற்றைப் பெற முடியாமல் நாசம் செய்தே வருகிறார்.


குறித்த பாடசாலையிலே ஆங்கில பாடத்திற்கு இவரோடு இன்னும் 03 ஆசிரியர்/ ஆசிரியைகள் கடமையாற்றுகிறார்கள். ஒவ்வொருவருக்கும் பொறுப்பளிக்கப் பட்ட வகுப்பு ரீதியாக ஜீ.சீ.ஈ (சா/த) பெறுபேற்றை நோக்கும் போது குறித்த இவ் ஆசிரியரின் வகுப்பிலேயே 85% மான மாணவர்கள் W எடுகிகிறார்கள். அத்துடன் ஒரு மாணவனால் கூட A சித்தியையும் இவரின் வகுப்பில் எடுக்க முடியாத நிலையே காணப் படுகிறது. ஏனைய 08 பாடங்களிலும் A சித்தியைப் பெற்ற பல மீத்திறன் உள்ள மாணவர்கள் இவரின் பாடத்திலே வெறும் C யையே பெறுகிறார்கள். இத்தனைக்கும் இவரே ஆங்கில பாட இணைப்பாளர் (Cordinator), சீனியர் ஆசிரியர்.


விடயத்திற்கு வருகிறேன். இப்போது தெய்வாதீனமாக இவருக்கு இடமாற்றம் ஒன்று வந்துள்ளது. உடன் செயற்படும் வண்ணம் இவர் வேறு பாடசாலைக்கு போக வேண்டும். இவர் போகிறார் இல்லை. தொடர்ந்தும் பாடசாலைக்கு வந்து அதிபரைத் தொல்லப் படுத்தி ஒப்பமிடும் புத்தகத்தைக் கேட்கிறார். 119 பொலிஸ் பிரிவுக்கு அழைத்து தன்னை ஒப்பமிட அதிபர் புத்தகத்தைத் தருகிறார் இல்லை என்று முறையிட்டுள்ளார். பொலிஸ் வந்து ஆசிரியர் மீது காறி உமிழ்ந்து விட்டுச் செல்கிறார்கள். ஆசிரியத் தொழிலுக்கு அவமானம்.


#இவர்_போக_மறுப்பதன்_காரணம் :


இவர் ஒரு ரியுசன் தொழிலாளி. தனது ரியுசனுக்கான மாணவர்களைப் பெற இந்த பாடசாலையை அவர் தொடர்ந்தும் படன்படுத்தி வருகிறார். பாடசாலை நேரத்திலே வகுப்புகளுக்குச் சென்று தனது ரியுசனுக்கு வருமாறு மாணவர்களை வற்புறுத்துவது இவரின் வழக்கம். அப்படி ரியுசனுக்கு வராத மாணவர்களை வகுப்பிலே இவர் கணக்கிலெடுப்பதில்லை. வேண்டுமென்றே புறக்கணிப்பது, ஒதுக்கி வைப்பது, தவணைப் பரீட்சைகளிலே புள்ளிகளைக் குறைப்பதோடு, தனது ரியுசனுக்கு வரும் மாணவர்களுக்கு அதிக புள்ளிகளை வழங்குவது எனத் துரோகம் செய்வார். பயம் காரணமாகவே ரியுசனுக்கு மாணவர்கள் போகிறார்கள். வேறு பாடசாலைக்கு இவர் இடமாற்றம் போனால் எந்த மாணவனும் இவரின் ரியுசனை நாட மாட்டார்கள் என்று அஞ்சுகிறார். எந்த மாணவன் எக்கேடு கெட்டாலும் அவருக்கு தமது ரியுசன் வருமானமே குறியாக இருக்கிறார். பாடசாலைக்கு வரும் சின்னஞ் சிறார்களை அவர்களின் பெற்றோரின் அனுமதி பெறாமல் வீடியோ எடுத்து அவரின் முகநூல் பக்கத்திலே ரியுசன் விளம்பரம் செய்கிறார். இதன் பாரதூரத்தை அவர் பிரிவதில்லை.


உரியவர்கள், பெற்றோர், பாடசாலைச் சமூகம் இவரின் இடமாற்றத்தில் கவனம் செலுத்தி மாணவர் கல்வியில் செழிப்படைய உதவ முன்வர வேண்டும்.


ஏ.எல். நௌபீர்.

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top