நிர்வாக தெரிவில் கைகலப்பு : சம்மாந்துறையில் ஒருவர் பலி!

Dsa
0

 



நூருல் ஹுதா உமர், ஐ.எல்.எம் நாஸிம்


சம்மாந்துறை பிரதேசத்தில் 65 வயதான மலையடி கிராமம் 4 கிராம சேவையாளர் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் மதஸ்தலம் ஒன்றின் நிர்வாக தெரிவில் ஏற்பட்ட கைகலப்பு காரணமாக நேற்று (7) மாலை அளவில் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.


சம்மாந்துறை பள்ளிவாசல் ஒன்றின் நிர்வாக காலம் முடிந்த நிலையில் கூட்டத்தில் பங்குபற்றிய  ஒரு சிலர் பெருநாள் முடிந்தவுடன் நிர்வாகத்தை தெரிவுசெய்யுமாறும், மற்றைய குழுவினர் ஓரிரு தினங்களுக்குள் தெரிவு செய்ய வேண்டுமென வலியுறுத்தியதன் காரணமாகவும் எதிர்வருகின்ற ஞாயற்றுக்கிழமை நிர்வாகத்தை தெரிவு செய்ய முடிவு செய்து கலைந்து வெளியே வரும்  போதே இம்மோதல் இடம் பெற்றதாக சம்பவம் குறித்து தெரியவருகின்றது.


சம்பவம் குறித்தான மேலதிக விசாரணையை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் சந்தேகத்தின் அடிப்படையில் இதுவரை நால்வர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top