ஏமாற்றிப் பிளைக்கும் வியாபாரிகளும் ஏங்கித் தவிக்கும் நுகர்வோரும் ஓர் ஆய்வணுகல்

Dsa
0

 


ஏ.எல்.நௌபீர்.

அம்பாரை நோக்கிப் படை எடுக்கும் ஆடை நுகர்வோர்.

"நல்ல ஆடை ஒன்றை வாங்குவதற்கு முதலில் நாம் நல்ல கடை ஒன்றைத்  தெரிந்திருக்க வேண்டும்" இது வரை காலமும் சாய்ந்தமருது, மருதமுனை, கல்முனை என்று இருந்த ஆடை வியாபாரம் அம்பாரை நகரை நோக்கி நகர்ந்து வருகிறது. அம்பாரை நோக்கி நாளுக்கு நாள் படை எடுக்கும் ஹபாயாக்களும், சல்வர்களும் இதனையே நமக்குக் கட்டியம் கூறுகின்றன.


நம்மவரின் மனசாட்சியே இல்லாத விலை நிர்ணயம், உ+ம் 9000/- இடப் பட்டுள்ள ஒரு ஹபாயாவை 5000/- வுக்கு குறைத்து விற்றல். இங்கே நட்டத்தில் விற்பதில்லையே! அப்போ இவர்களின் இலாப வீதம்? தரமற்ற இந்தியாவின் ஆடைக் குப்பைகளால் நிறைந்து வரும் முஸ்லிம் கடைகள், உ+ம் : எங்கு பார்த்தாலும் தரற்ற சிறுவர் ஆடைகளும், பெண்களுக்கான "கீலாபாBலா" ஆடைகளே நிறைந்து கிடக்கின்றன.


நுகர்வோரை மதித்து நடக்கத் தெரியாமை, (உ+ம்) பலதரப்பட்ட நுகர்வோரில் அவரவரின் மனநிலை அறிந்து கவனங் கொள்ளும் வாடிக்கையாளர் கவனிப்பு (customer care) இல்லாமை. இலாபத்தை மட்டுமே நோக்காக கொண்ட விற்பனைப் பாங்கு (Businesse style). (உ+ம்): வாடிக்கையாளர் நல்லதை வாங்க வேண்டும் என்ற எந்த திட்டமும் நம்மவர் கடைகளில் இல்லை, எதை வாங்கி எப்படி நாசமாகப் போனாலும் இலாபம் கிடைத்தால் சரி என்ற மனப் போக்கில் நடந்து கொள்கிறார்கள்.


வாடிக்கையாளரை புது வரவு என ஏமாற்றுதல் (உ+ம்): முன்னைய கடை இருப்புக்களை கடைகளின் முன்னால் கொண்டு வந்து புதிய பொதிகளில் வைத்து புதிய வரவு என விற்பது. அண்மையில் ஒரு கடையில் இருந்து புதிய வரவு என்ற பொதியைப் பிரித்துப் பார்த்த போது முன்னர் அதே கடையால் பொறிக்கப்பட்ட விலை, கடை லாஞ்சனை என்பன அதற்குள் (புதிய வரவு என்ற பொதிக்குள்)  இருந்துள்ளமை தெரிய வந்து கடை முதலாளிக்கு அசடு வழிந்துள்ளது.


நாம் ஒரு பொருளை உரிய brand, colours கேட்டால் அந்த brand வருவதில்லை, அதற்குப் பதிலாக இதுவே வருகிறது எடுத்துச் செல்லுங்கள் எனப் பொய்யைக் கூறுவது, நீங்கள் கேட்கும் களரை விட இந்தக் களர் நல்லது, இதைத் தான் அதிகமாவர்கள் விரும்பி எடுக்கிறார்கள் எடுத்துச் செல்லுங்கள் என தலையிலே கட்டி விடும் அற்ப குணத்தை உடையவர்களாக நமது வியாபாரிகள் காணப்படுகிறார்கள். நாம் ஒன்றைக் கேட்டால் அது பழையது, இப்போது வராது என நமது கேள்வியை, விருப்பை மட்டந் தட்டுதல், தன்னிடம் உள்ளதையே சிறந்தது எடுத்துச் செல்லுங்கள் என வாதிடுதல்.


மேலுள்ள காரணிகளால் நோன்புப் பெருநாள் வியாபாரத்தில் அம்பாரை மாவட்டத்தின் முஸ்லிம் பிரதேசங்கள் சோபை இழந்து வருகின்றன. அத்தோடு பெருநாள் வியாபாரத்திலே அம்பாரை நகரின் சிங்கள சகோதரர்களின் கடைகள் முஸ்லிம் வாடிக்கையாளர்களால் குவிந்து வருகின்றன. அவர்கள் அதிக இலாபத்தோடு விற்பதுமில்லை, விலையைக் குறைத்து விற்பதுமில்லை, நியாயமான விலை நிர்ணயம். முஸ்லிம் கடைகளில் சண்டை செய்து குறைத்து வாங்கும் விலைக்கே அவர்கள் விலைக் #குறைப்பின்றித் தருகிறார்கள்.


இது அம்பாரை முஸ்லிம்களுக்கான இன்னுமொரு ஆபத்தான நிலை. அதாவது வெறும் பொட்களை வாங்கி விற்கும் வியாபாரத்தின் எளிய நிலைமைகளும் எதிர் காலத்தில் அவர்களைக் கைவிட்டுப் போய் விடும் அபாய நிலை தோன்றலாம். கைசேதப் படலாம். என்ன செய்ய நம்மவரின் பேராசையே நமக்கான பெரும் நட்டம்.


Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top