காணாமல்போன நபர் வாவியில் இருந்து சடலமாக மீட்பு

0

 காணாமல்போன ஆண் ஒருவர் தணமல்வில - பலஹருவ வாவியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பலஹருவ பிரதேசத்தில் வசிக்கும் 67 வயதுடைய நபரே நேற்று (07.04.2023) சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மரணத்துக்கான சரியான காரணம்

சடலம் இருந்த வாவிக்கு அருகில் அவரது சைக்கிள் கண்டெடுக்கப்பட்டது என்றும், மரணத்துக்கான சரியான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

காணாமல்போன நபர் வாவியில் இருந்து சடலமாக மீட்பு | Missing Person Recovery From Dead Body

இதேவேளை, குறித்த நபர் நான்கு நாட்களுக்கு முன்னர் வீட்டிலிருந்து காணாமல்போயிருந்தார் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top