யாழில் பதற்றம் – காவல்துறை நீர்த்தாரை பிரயோகம்

0

 


யாழ்ப்பாணம் – அரசடி சந்தியில் பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டம் மீது காவல்துறை நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது ஒருவர் காயமடைந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேசிய தைப்பொங்கல் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்திருந்தார்.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

இன்று பிற்பகல் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இருந்து குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பேரணி நல்லார் நோக்கி பயணித்த இந்தப் பேரணி மீது காவல்துறையினர் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டதையடுத்து, அங்கு பதற்றமான சூழல் நிலவியதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.


Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top