விலைச் சூத்திரத்திற்கு அமைவாக எரிபொருட்களின் விலைகளைத் தீர்மானிக்கும் விலை மீளாய்வுக் குழு இன்று கூடவுள்ளது.
ஒவ்வொரு மாதமும் 10 ஆம் திகதிவிலைச்சூத்திரத்திற்கு அமைவாக எரிபொருட்களின் விலைகளில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.
இந்த நிலையில் விலை மீளாய்வுக் குழு இன்று பிற்பகல் 6 மணியளவில் நிதியமைச்சில் கூடவுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதன்படி, கடந்த மாதம்10ஆம் திகதி விலை மீளாய்வுக்குழு கூடியதுடன், அன்றைய தினம் நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிகொருட்களின் விலைகளில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
ஒக்டேன் 92 ரக பெற்றோலின் விலை ஒரு ரூபாவால் குறைக்கப்பட்டநிலையில், 95 ரக பெற்றோலின் விலை இரண்டு ரூபாவால் குறைக்கப்பட்டிருந்தது.
இதேவேளை சுப்பர் டீசலின் விலை குறைக்கப்பட்டிருந்த நிலையில், ஒக்டேன் 92 ரக பெற்றோலின் விலை 137 ரூபாவாகவும், ஒக்டேன் 95ரக பெற்றோலின் விலை 161 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

