வவுனியாவில் தொலைபேசி அழைப்பால் ஏற்பட்ட விபரீதம் - 15 வயது பாடசாலை மாணவிக்கு நேர்ந்த கதி...!

0

வவுனியா சிதம்பரபுரம் கற்குளம் பகுதியில் நேற்றையதினம் 15 வயதான பாடசாலை மாணவியொருவர் பாலியல் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிதம்பரபுரம் கற்குளம் பகுதியில் வசிக்கும் குறித்த பாடசாலை மாணவியுடன் அதே பகுதியில் வசிக்கும் மூன்று பிள்ளைகளின் தந்தையான 41 வயதுடைய குறித்த நபர் தொலைபேசி மூலம் சில தினங்களாக கலந்துரையாடியுள்ளார்.

அதன் பின்னர் குறித்த நபர் நேற்றையதினம் மாணவியை கற்குளம் பகுதியில் அமைந்துள்ள காட்டுப்பகுதிக்கு வருமாறு தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து குறித்த மாணவியும் அங்கு சென்றநிலையில் குறித்த நபர் பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.

வீடு திரும்பிய பாடசாலை மாணவி சம்பவம் தொடர்பில் தந்தையிடம் தெரிவித்தமையினையடுத்து வவுனியாபொலிஸில் முறைப்பாட்டு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த சந்தேகநபர் தலைமறைவானதினையடுத்து அவரை கைது செய்யும் நடவடிக்கையை வவுனியா பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

மேலும் மருத்துவ பரிசோதனைகளுக்காக மாணவி வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top