ஈராக் தலைநகரில் மீண்டும் ஊரடங்குச் சட்டம்

0

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் பொதுமக்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் இரண்டாவது நாளாகவும் இடம்பெற்ற மோதல்களையடுத்து அங்கு மீண்டும் ஊரடங்குச்  சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. 
மறு அறிவித்தல் வரை இந்த ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 
வேலையின்மை, ஒழுங்கற்ற சேவைத்துறை மற்றும் ஊழல் ஆகிய காரணங்களை முன்னிறுத்தி முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களின் காரணமாக, முன்னதாக மூன்று நகரங்களில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. 
இந்த மோதல்கள் காரணமாக, ஏழு பேர் உயிரிழந்துள்ளதுடன், நூற்றுக் கணக்கானோர் காயமடைந்துள்ளனர். 
இதேவேளை, ஈராக்கின் பல பகுதிகளில் சமூக வலைத்தளங்களும் இணையத்தள சேவைகளும் முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top