மட்டக்களப்பில் முன்று பிள்ளைகளின் தந்தை பரிதாபமாக பலி!

0

மட்டக்களப்பு- வந்தாறுமூலையில் இடம்பெற்ற விபத்தில் 3 பிள்ளைகளின் தந்தை ஒருவர் பரிதாபமாக உயிாிழந்துள்ளார்.

அத்துடன் இந்த விபத்தில் மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு பதுளை வீதியை அண்டியுள்ள காயான்குடா கிராமத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 34 வயதான தங்கராசா சுதாகரன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

நேற்றையதினம் சந்திவெளியிலிருந்து செங்கலடி நோக்கி செல்லும்போது வந்தாறுமூலையில் வேன் ஒன்றில் மோதுண்டு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் வேன் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top