அல்ஜலால் வித்தியாலய கட்டிட நிர்மாணப் பணிகள் விரைவில் மீள ஆரம்பிக்கப்படும்; ஹரீஸிடம் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் உறுதி!

0


அல்ஜலால் வித்தியாலய கட்டிட நிர்மாணப் பணிகள் விரைவில் மீள  ஆரம்பிக்கப்படும் அது வேறு எந்த பாடசாலைக்கும் இடமாற்றம் பெறாது என கிழக்கு மாகாண பிரதம செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸிடம்  உறுதிபட தெரிவித்துள்ளார். 

சாய்ந்தமருது அல்ஜலால் வித்தியாலயத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள கட்டிட விவகாரம் குறித்து ஏற்பட்டுள்ள சர்ச்சையை தொடர்ந்து மாகாண கல்வி அமைச்சின் செயலாளரை தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு
குறித்த பாடசாலை கட்டிடம் எந்தவித தடைகளும் இல்லாமல் விரைவில் கட்டி முடிக்கப்பட்டு மாணவர்களிடம் கையளிக்கப்பட வேண்டும் என
பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க இவ் உறுதி மொழி வழங்கப்பட்டுள்ளது. 

இதேவேளை இன்றய தினம் இது குறித்து விசேட சந்திப்பொன்று ஹரீஸின் ஏற்பாட்டில் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசமுடனும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top