ஶ்ரீ லங்கா பொது ஜன பெரமுனவின் மொட்டு சின்னத்தை மாற்றுவதற்கு இடமில்லை

0


ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் கோரிக்கை நியாயமானதாக இருந்தாலும், ஶ்ரீ லங்கா பொது ஜன பெரமுனவின் மொட்டுச்சின்னத்தை மாற்றுவதற்கு இடமில்லை  என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைத்த போதே, அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும், ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி தனித்து போட்டியிட்டால், பாரிய பின்னடைவை சந்திக்க நேரிடும் எனவும், நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.
ஶ்ரீ லங்கா பொது ஜனபெரமுன மற்றும் ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி ஆகியன இணைந்து கூட்டணியாக ஜனாதிபதி தேர்தலுக்கு செல்வதற்கு பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகவும் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், இறுதியாக இடம்பெற்ற பேச்சுவார்த்தையில், கூட்டணி அமைத்து செல்வதாக இருந்தால், ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மொட்டுச்சின்னம் அல்லாமல் பொதுச்சின்னத்திலேயே  தேர்தலைச் சந்திக்க வேண்டும் என, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கோரியதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார  கூறியுள்ளார். 
Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top