சர்ச்சைக்குரிய சட்டம் மரணித்து விட்டது - கெர்ரீ லேம்

0

கைதிகளை விசாரணைக்காக சீனாவுக்கு நாடுகடத்தும் சர்ச்சைக்குரிய சட்டம் மரணித்து விட்டதாக ஹொங்கொங் தலைவர் கெர்ரீ லேம் தெரிவித்துள்ளார்.
இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஹொங்கொங் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட அனைத்து திட்டங்களும் தோல்வியடைந்துள்ளதாக ஊடக சந்திப்பொன்றில் கெர்ரீ லேம் சுட்டிக்காட்டியுள்ளதாக அந்த நாட்டு தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.
எனினும் கைதிகளை விசாரணைக்காக சீனாவுக்கு நாடு கடத்தும் சட்டத்தை வாபஸ் பெறுவது குறித்து அவர் எந்தவொரு கருத்தையும் வௌியிடவில்லை.
இந்த சர்ச்சைக்குரிய சட்டத்தை இரத்து செய்யுமாறு வலியுறுத்தி ஹொங்கொங்கில் பல வாரங்களாக அரசாங்கத்திற்கு எதிரான பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top