ஹஸ்பர் ஏ ஹலீம்)
சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக் கத்தினால் (கபே) ஏற்பாடு செய்யப்பட்ட அரச அதிகாரிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களுக்கான இலஞ்சம் மற்றும் ஊழலை ஒழிப்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு இன்று (03) கிண்ணியா பொது நூலக சபைக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் விசாரனை அதிகாரிகளை வளவாளர்களாக கொண்டு நடாத்தப்பட்டது.
இச் செயலமர்வில் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான விளக்கங்கள் அளிக்கப்பட்டன
நாட்டில் இயங்கும் அரச திணைக்களங்களினால் சில குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய திணைக்களங்களே அதிகமான இலஞ்சம் வாங்குகிறார்கள் இதில் பொலிஸ் திணைக்களம் , மது ஒழிப்பு அதிகாரிகள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், சுங்கத் திணைக்கள அதிகாரிகள், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், போன்றவர்களே அதிகமான இலஞ்சம் மோசடிகளில் ஈடுபடுவதாகவும் நாட்டில் இலஞ்ச ஊழல் குறையவில்லை ஒவ்வொரு வருடமும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது வருடா வருடம் அறுபது, எழுபது அரச உத்தியோகத்தர்கள் ஊழல் மோசடிகளில் கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவிக்கிறார்கள் என இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பொறுப்பதிகாரி ஏ.எச்.எம்.எஸ்.அபயசிங்க வளவாளராக கலந்து கொண்டு தெளிவுபடுத்தும் போது தெரிவித்தார்.
இக் குறித்த செயலமர்வில் கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மனாஸ் மக்கீன், கபே அமைப்பின் திருகோணமலை மாவட்ட இணைப்பாளர் ஆர்.எம்.றாபில்,பொலிஸ் அதிகாரிகள்,சிவில் சமூக அமைப்புக்கள், கிண்ணியா சிரேஷ்ட பிரஜைகள் சங்க உறுப்பினர்கள், சமாதான நீதவான்கள் சங்க உறுப்பினர்கள், கிண்ணியா பிரதேச செயலக பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.
