ரயில் தடம்புரள்வு - ரயில் சேவைகள் பாதிப்பு

0

(க.கிஷாந்தன்)

பதுளை - கொழும்பு பிரதான புகையிரத போக்குவரத்து பாதையில் தலவாக்கலை புகையிரத நிலையத்திற்கு அருகாமையில், 02.07.2019 அன்று இரவு 10 மணியளவில் ஏற்பட்ட புகையிரத தடம் புரள்வு காரணமாக மலையக ரயில் சேவைகள் சுமார் மூன்று மணித்தியாலயங்கள் பாதிப்படைந்தன.

நானுஓயா புகையிரத நிலையத்திலிருந்து தலவாக்கலை புகையிரதம் நிலையம் வரை புகையிரத பாதைக்கு கருங்கற்கள் போடும் பணியில் ஈடுப்பட்ட வந்த புகையிரதமே இவ்வாறு தலவாக்கலை புகையிரத நிலையத்தில் வைத்து இவ்வாறு தடம் புரண்டுள்ளது.

இதன் காரணமாக பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற இரவு நேர தபால் ரயில் தலவாக்கலை புகையிரத நிலையத்தில் சுமார் மூன்று மணித்தியாலயம் தரித்து வைக்கப்பட்டது.

அதன்பின் பாதிப்பேற்பட்ட ரயில் பாதையை சீர்செய்யும் பணிகளில் ரயில் நிலைய ஊழியர்களும், அதிகாரிகளும் ஈடுபட்டனர்.

எனினும் 03.07.2019 அன்று அதிகாலை 1.30 மணியளவில் ரயில் பாதையை சீர் செய்துள்ளதோடு, மலையகத்திற்கான புகையிரத சேவை வழமைக்கு மாறியுள்ளதாக தலவாக்கலை புகையிரத நிலையத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

மேலும் தலவாக்கலை புகையிரத நிலையத்தில் தரித்து வைக்கப்பட்ட இரவு நேர தபால் ரயில் கொழும்பை நோக்கி புறப்பட்டது.
Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top