அரபு கலாச்சாரத்திற்கு பதிலாக, சிங்கள கலாச்சாரத்தை கற்றுக்கொடுக்க வேண்டும் - ஞானசார தேரர்

0
சில சந்தர்ப்பங்களில் வடக்கிலுள்ள முட்டாள்கள் சிலர் சிங்கள மக்களின் இதயத்துடிப்பை புரிந்து கொள்ள முடியாமல் இருக்கின்றனர், ஆனால் அங்குள்ள தமிழ் மக்கள் கல்முனையை மீட்டுத்தருமாறு எம்மிடம் மன்றாடுகின்றனர் என பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

தனியார் ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய விசேட செவ்வியில் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

முன்னாள் அமைச்சர் ஹக்கீமுக்கும் ஏனையவர்களுக்கும் விசேடமாக முஸ்லிம் மக்களுக்கும் தமிழ்த் தலைவர்களுக்கும் ஒரு விடயத்தைக் கூற விரும்புகின்றோம்.

அரசியலமைப்பு குறித்து பேசி பிரச்சினைகளை தோற்றுவிக்க முன்னர் வடக்கிலும் கிழக்கிலுமுள்ள மக்கள் சிங்களம் கற்று இந்த பிரச்சினைகளை புரிந்து கொள்ள முதலில் இடமளியுங்கள். இதன்மூலம் அவர்கள் அரசியலமைப்பையும் புரிந்து கொள்வார்கள்.

அத்துடன் சிங்கள தமிழ் மற்றும் முஸ்லிம் அனைத்து பிரச்சினைகளையும் அவர்கள் புரிந்து கொள்வார்கள்.

ஹக்கீமுக்கு சிங்களம் தெரியாவிட்டால் என்ன செய்ய முடியும். கிழக்கிலுள்ள மக்களுக்கு அரபு மொழியைப் போதிப்பதை விட்டுவிட்டு சிங்கள மொழியை கற்பிக்க வேண்டும். ஷரியா சட்டங்களை கற்பிக்க முன்னர் இலங்கையின் சட்டங்களை கற்றுக் கொடுக்க வேண்டும்.

அரபு கலாச்சாரத்திற்கு பதிலாக சிங்கள கலாச்சாரத்தை கற்றுக்கொடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்
Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top