#ஊடக #யுத்தம் #ஆரம்பமாகி #விட்டது..! #முஸ்லிம்களே #கவணம்..!

0


2015ம் ஆண்டு மஹிந்தவின் ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்பதற்காக அத்தனை தமிழ் ஊடகங்களும் மேற்குலக ஊகங்களும் பொய்யான செய்திகளை பரப்பியபோது, ஒரு வழியின்றி அந்த ஊடகங்களின் செய்திகளின் உண்மைத்தண்மை புரியாமல் அதனூடே அள்ளுப்பட்டு சென்றோம். 

அதன் காரணமாக மேற்குலகம் விரும்பி ஆட்சியை கொண்டு வந்ததன் காரணமாக இன்று சொல்லொன்னா துயரங்களை அனுபவிக்கின்றோம். 

அதே போன்றுதான் இன்று அதேமாதிரியான ஊடக யுத்தம் ஆரம்பமாகியுள்ளது. சில ஊடகங்கள் முஸ்லி்ம் சமூகத்தையும், அதன் தலைவர்களையும் சமூக விரோதிகளாக இனம் காட்டுவதிலேதான் குறியாக இருக்கின்றார்கள். குறிப்பாக ரிசாட் பதியுதீனுக்கு எதிராக சில தமிழ் ஊடகங்கள் 24 மணித்தியாளமும் வசை பாடிக்கொண்டு அதற்கான வெற்றியையும் கண்டு விட்டார்கள். இதேபோன்றுதான் மற்றவர்களுக்கும் செய்தார்கள்.

இப்போது இந்த ஊடகங்கள் ரணிலைத்தான் இந்த நாட்டின் தலைவராக மீண்டும் கொண்டு வரவேண்டும் என்பதை கருத்தில் கொண்டு செயல்பட்டு வருகின்றார்கள். அதனை நமது வங்குரோத்து பிடித்த சில ஆசாமிகள் அந்த ஊடகங்களின் பொய்ச் செய்திகளை உண்மையாக்குவதற்காக அந்த ஊடகங்களின் செய்திகளை ஆதரங்களாக காட்டுகின்றார்கள். அந்த ஊடகங்களின் நோக்கம் என்னவென்பதை புரியாத அப்பாவி முஸ்லிம் மக்கள் மீண்டும் ஏமாற்றப்படுவதற்கு இது ஏதுவாக அமைந்துவிடப் போகின்றது என்பதே உண்மையாகும்.

ஆகவே மேற்படி ஊடகங்களின் செய்திகளை நம்பி நாம் ஏமாந்துவிடக்கூடாது என்பதே எங்களின் கருத்தாகும்.

எம்எச்எம்.இப்றாஹிம்
கல்முனை..
Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top