பொரள்ளை, காதர்னானவத்தை பிரதேசத்தில் திடீர் தீ விபத்து சம்பவம் ஏற்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 02.30 மணியளவில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் 141வது பிரிவில் உள்ள 04 தற்காலிக வீடுகள் சேதமடைந்துள்ளன.
பொலிஸார், பிரதேசவாசிகள் மற்றும் கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
குறித்த தீயினால் உயிரிழப்புக்கள் எதுவும் ஏற்படவில்லை என்பதுடன் தீயிற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொரள்ளை பொலிஸார்மேற்கொண்டு வருகின்றனர்.

