கல்முனை வடக்கு பிரதேச செயலக தரமுயர்த்தல் விவகாரத்தின் ஊடாக , கருணா என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியில் பிரிவினைகளை உருவாக்க முயற்சிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஹம்மத் நஸீர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே, முஹம்மத் நஸீர் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.
