கோர விபத்தில் 5 பேர் உயிரிழப்பு 12 பேர் படுகாயம்

0

பொலன்னறுவையில் ஏற்பட்ட கோர விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் 12 பேர் படுகாயம் அடைந்த நிலையில் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு – பொலன்னறுவை வெலிகந்த பகுதியில் இந்த விபத்து நேற்று (19) அதிகாலையில் இடம்பெற்றுள்ளதாகவும் இதில் 4 பெண்கள் உயிரிழந்துள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வேன் ஒன்றும் உழவு இயந்திரம் ஒன்றும் மோதிக்கொண்டமையினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிவிக்கப்படுகின்றது.

உழவு இயந்திரத்தில் பயணித்தவர்கள் திம்புலாகல, மிஹிது பெரஹராவை பார்வையிட்டு வீடு திரும்பியவர்களே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளனர். இவர்கள் பெலியத்த பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் 29 – 60 வயதிற்கு உட்பட்டவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதிக வேகமும், வான் சாரதியின் கவனயீனமுமே இந்த விநத்துக்குக் காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வேன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன்
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top