நாட்டை வீழ்ச்சியடைந்த நிலையில் பொறுப்பேற்று தற்போது சக்தி மிக்க நிலைக்கு கொண்டுவந்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஹோமாகமயில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் ஐக்கிய தேசிய அரசாங்கத்தினால், 6 இலட்சத்திற்கும் அதிகமான குடும்பங்களுக்கு சமூர்த்தி கொடுப்பனவுகளை பெற்றுக்கொடுக்க முடிந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் தற்போது ஸ்தீரான அரசாங்கம் ஒன்று இல்லை என கூறும் எதிர்க்கட்சி, 21 வருடங்களாக ஆட்சியில் இருந்த போது கூட இவ்வாறு செயட்பட வில்லையென பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.
இதேவேளை, நேற்றைய நிகழ்வின் போது, 4 ஆயிரத்து 510 பேருக்கு சமூர்த்தி உரித்துக்களை பிரதமர் ரணில் விக்ரமசிங்க வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

