எச்சரிக்கை..! கல்வி அமைச்சின் அதிரடி தீர்மானம்!

0


 பல்வேறு அரசியல் நோக்கத்திற்காகவும் மற்றும் தனிப்பட்ட விடயங்களை அடிப்படையாக கொண்டும் பாடசாலை செயற்பாடுகளுக்கு தடை ஏற்படுத்தும் விதத்தில் கருத்துக்களை வௌியிடும் நபர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

அறிக்கையொன்றை வௌியிட்டு அந்த அமைச்சு இதனை குறிப்பிட்டுள்ளது.

சில பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களை பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டாம் என அழுத்தம் கொடுப்பதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அவ்வாறான நபர்கள் மற்றும் குழுக்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு தகவல் அளிக்குமாறு கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

பாடசாலைகளின் பாதுகாப்பு தொடர்பில் பாதுகாப்பு படையினரால் உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னர் கடந்த 6ம் திகதி தரம் 6 தொடக்கம் தரம் 13 வரை இரண்டாம் தவணை கல்விச் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டன.

மாணவர்களின் வருகை குறைவாக காணப்பட்டாலும் , வழமைப்போன்று கல்விச் செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு கல்வி அமைச்சு பாடசாலைகளின் அதிபர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.


Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top