சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு - பயங்கரவாதத்தை ஒழிக்க பொன்சேக்காவின் புதிய யோசனை...!

0


சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சினை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவருக்கு பெற்றுக்கொடுக்க எதிர்க்கட்சி தரப்பினர்களும் ஒத்துழைப்புகளை வழங்க வேண்டுமென பீல்ட் மார்சல் சரத் பொன்சேக்கா கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று உரையாற்றும் போதே, அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

நாட்டில் ஏற்படும் பாதுகாப்புக் குறித்த சவால்களுக்கு பொறுப்புக் கூறவோ அல்லது அர்ப்பணிப்புடன் செயற்படுவதற்கோ, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சானது அரசாங்கத்திடம் இருக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு அரசாங்கத்திடம் பொறுப்புகள் காணப்பட்டு, தவறிழைக்கும் பட்சத்தில் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள தாங்கள் தயாராக இருப்பதாகவும் சரத் பொன்சேக்கா சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, தேசிய பாதுகாப்பு அமைச்சு என்னும் பேரில், முன்னாள் அமைச்சர் லலித் அத்துலத் முதலி காலத்தில்  காணப்பட்ட அதிகாரங்களுடன், சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு காணப்படுமாயின், இந்த பயங்கரவாத பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கமுடியுமெனவும், பீல்ட் மார்சல் சரத் பொன்சேக்கா யோசனை ன்வைத்துள்ளார்.
Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top