வாள், கூரிய ஆயுதங்கள் வைத்திருந்தால், அவற்றை அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களில் ஒப்படைக்க பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் மேலும் 48மணி நேரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
வாள், கூரிய ஆயுதங்களை இம்மாதம் 4,5 ஆகிய இரு தினங்களுக்குள் பொலிஸ் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும் என பொதுமக்களுக்கு பொலிசாரினால் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நாடுபூராகவும் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் மேலும் 48 மணி நேரங்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

