வவுனியாவில் விமானங்களைத் தாக்குதல் குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, ஈரப் பெரியகுளம் பகுதியில் இருந்து சொப்பர் ரக விமானங்களைத் தாக்கக்கூடிய சுமார் 5 குண்டுகளை காவல்துறையினர் மீட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் கூறினார்.
இரகசியத் தகவலின் பிரகாரம்,ஈரப்பெரியகுளம், அளுத்கம பகுதியிலுள்ள காட்டுப் பகுதியில் நடத்திய தேடுதல் நடவடிக்கையின்போது காவல்துறை மோப்ப நாய்களின் உதவியுடன் இந்த குண்டுகள் கண்டெடுக்கப்பட்டதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
அத்துடன் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம், அந்த காட்டுப் பகுதியில் விசேட அதிரடிப்படையினர் மேலும் தேடுதல்களை தீவிரப்படுத்தியுள்ளனர்.
கடந்த யுத்த காலப்பகுதியில் வவுனியா விமானப்படை முகாம் மீது தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிட்டிருந்த விடுதலைப் புலி உறுதிப்பினர்களால் இந்த விமான எதிர்ப்பு குண்டுகள் கொண்டுவரப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
வவுனியா நீதவானின் உத்தரவுடன் விசேட அதிரடிப்படையினால் குண்டுகளை செயலிழக்கச் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த குண்டுகள் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஈரற்பெரியகுளம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

