பிரான்சில் குண்டு வெடிப்பு.. 13 பேர் காயம்.

0


பிரான்சின் லயன் நகரில் இடம்பெற்ற பார்சல் குண்டுவெடிப்பில்13 பேர் காயமடைந்துள்ளனர்.


பிரான்சின் மூன்றாவது பெரிய நகரமான லயனில் மக்கள் அதிகமாக காணப்படும் வீதியொன்றில் வெதுப்பகத்திற்கு வெளியே இந்த குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது.

இதன் போது எட்டு வயது சிறுமி உட்பட 13 பேர் காயமடைந்துள்ளனர்.

நகரின் வரலாற்று பழமை வாய்ந்த விக்டர் கியுகோ வீதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பாரிய சத்தமொன்று கேட்டது என அருகில் உள்ள ஹோட்டலொன்றின் வரவேற்பாளர் தெரிவித்துள்ளார்.

மக்கள் பதற்றமடைற்து ஓடுவதையும் பல அலறல்களையும் கேட்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து பிரான்சில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


இதேவேளை சைக்கிளில் பார்சல் ஒன்றுடன்  அந்த பகுதிக்கு வரும் நபர் ஒருவர் குறித்த சிசிடிவி காட்சிகளை வெளியிட்டுள்ள காவல்துறையினர் பொதுமக்களிடமிருந்து தகவல்களை கோரியுள்ளனர்
Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top