நாட்டுக்குத் தீ வைத்துவிட்டு, அதிகாரத்தைக் கைப்பற்றும் சூதாட்டம் இடம்பெற்று வருகிறது.

0




கடந்த 1983ஆம் ஆண்டு, ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து கலவரங்கள் இடம்பெற்றதைப் போன்றே,
வன்முறைகளை ஏற்படுத்தும் அரசியல் சூதாட்டமே நடைபெற்று வருவதாக அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.


கண்டி, குண்டசாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

திரைப்படத்தில் வரும் காட்சிகளைப் போன்று, அரசியல் இடம்பெற்று வருவதாகக் கூறிய அவர், இவை வெறும் நடிப்பு என்றும் இதன்மூலம், மக்கள் எந்தவொரு சேவையையும் பெற்றுக்கொள்வதில்லை என்றும் கூறினார்.

நாட்டுக்குத் தீ வைத்துவிட்டு, அதிகாரத்தைக் கைப்பற்றும் சூதாட்டம் இடம்பெற்று வருவதாகவும் எது எவ்வாறாயினும் மக்களின் பிரச்சினைக்கு முன்னுரிமை வழங்கப்படுவதில்லை என்றும் அவர் கூறினார்.


Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top