விமான சேவை ஊழியர் ஒருவர் கைது

0

ஸ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவையில் கடமையாற்றும் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் இன்று முற்பகல் கட்டுநாயக்க சுங்க பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார் என எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

04 கிலோ கிராம் எடையுடைய 40 தங்க கட்டிகளை கடத்த முயற்சித்ததாக தெரிவித்தே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

டுபாய் நாட்டில் இருந்து வருகை தந்த நபர் ஒருவரினால் கொண்டு வரப்பட்ட பொதி ஒன்றினை விமான நிலைய வளாத்திற்கு வெளியில் காவிச்சென்று ஒப்படைக்க குறித்த நபர் முயற்சிகள் மேற்கொண்டதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள 29 வயதுடைய வத்தளையை சேர்ந்த குறித்த சந்தேக நபர் சுங்க பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top