குமண தேசிய சரணாலயத்தில் சிறுத்தை தாக்கி ஒருவர் உயிரிழப்பு - மேலும் ஒருவர் காயம்

0

குமண தேசிய சரணாலயத்தில் சிறுத்தை தாக்கியத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.
சரணாலயத்தினுள் பாதை பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஒருவரே நேற்று சிறுத்தையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
குமண தேசிய சரணாலயத்தின் நுழைவாயிலில் இருந்து சுமார் 7 கிலோமீற்றர் தொலைவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
திருக்கோவில் பகுதியை சேர்ந்த 45 வயதான ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலத்தை மீட்பதற்காக சென்றிருந்த வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளில் ஒருவரையும் சிறுத்தை தாக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்போது காயமடைந்த திணைக்களத்தின் ஜீப் சாரதி காயமடைந்து அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தை அடுத்து, குமண சரணாலயத்தின் பாகுரே பகுதிக்குள் சுற்றுலாப் பயணிகள் பிரவேசிக்க தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனினும், சரணாலயத்தின் ஏனைய பகுதிகள் சுற்றுலாப் பயணிகளுக்காக திறந்துவிடப்பட்டுள்ளதாக சரணாலயத்தின்  அதிகாரிகள்  குறிப்பிடுகின்றனர்.
Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top