பொத்துவில் கடற்கரைக்கு நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழப்பு

0

பொத்துவில்,கொட்டுக்கல் கடற்கரைக்கு நீராடச் சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று மாலை 4.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கொட்டுக்கல் கடற்கரைப் பகுதியில்,படகொன்றை  ஓட்டிச் சென்ற இரண்டு சகோதரர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
குறித்த இருவரும் பயணித்த படகு கவிழ்ந்ததையடுத்து,அவர்கள் நீரில் மூழ்கியதாகவும்,எனினும் அவர்கள் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே உயிரிழந்ததாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
கொழும்பைச் சேர்ந்த 12 மற்றும் 16 வயதுகளையுடைய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அர்பான் அலி மற்றும் அப்துல்லா அலி ஆகிய இரண்டு சகோதரர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொத்துவில் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்
Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top