அமெரிக்காவின் உள்துறை செயலாளர் தனது பதவியை இராஜினாமா

0

அமெரிக்காவின் உள்துறை செயலாளர் Kirstjen Nielsen   தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
சர்சைக்குரிய அமெரிக்கா மெக்சிகோ எல்லை விவகாரத்தில்,அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் செயற்பாடுகளில் உடன்பாடு எட்டப்படாத நிலையிலேயேஅவர் தனது பதவி விலகலுக்கு ஆளாகியிருக்கலாம் என  சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உத்தேச அமெரிக்க மெக்சிகோ  எல்லை சுவர் மற்றும் புலம்பெயர்ந்த குடும்ப விவகாரங்களுக்கு  பொறுப்பாகவிருந்த Kirstjen Nielsen, தனது பதவி விலகளுக்கான சரியான காரணத்தை Kirstjen Nielsen  வெளியிடவில்லை.
இந்த நிலையில்,அவரின் பதவி விலகலை அடுத்து அந்த வெற்றிடத்துக்கு  சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு ஆணையார் Kevin McAleenanஐ தற்காலிகமாக  நியமிக்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் டிரம்ப் தனது  டுவிட்டர் பக்கத்தினூடாக குறிப்பிட்டுள்ளார்.
 Kirstjen Nielsen ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்தில்,உள்துறை செயலாளராக தனது பணிகளை ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது 
Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top