கோட்டாவுக்கு எதிராக நேற்று இரவு அமெரிக்க நீதிமன்றம் விடுத்துள்ள திடீர் அறிவிப்பு!

0

முன்னாள் பாதுக்காப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸவை அமெரிக்க நீதிமன்றில் ஆஜராகுமாறு அந்நாட்டு அதிகாரிகளினால் நேற்று இரவு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் மகள் அஹிங்சா விக்ரமதுங்கவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை அடிப்படையாகக் கொண்ட அவருக்கு இந்த அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கலிபோர்னியாவில் உள்ள பிரபல வர்த்தக நிலையமான Traders Joe’s American Grocery Store இல் கோட்டாபாய இருந்த வேளையிலேயே அவருக்கு இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இத தொடபுல் மேலும் தெரியவருகையில்,
தனது தந்தையின் கொலையுடன் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸவிற்கு தொடர்பிருப்பதாக லசந்த விக்ரமதுங்கவின் மகளால் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோட்டாபய ராஜபக்ஸவின் நெருங்கிய நண்பரான சன்ஜீவ குணசேகரவின் மகளின் திருமண வைபவத்தில் கலந்து கொள்வதற்காக அவர் அமெரிக்காவிற்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top