நேற்று 6.45 மணியளவில் மட்டக்களப்பு ஏறாவூர் நகர் பகுதியில் உள்ள முனையவளவு வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
ஏறாவூர் நகர சபைக்கு கிட்டிய தூரத்திலேயே இவ் வீடு இருக்கிறது.
இந்த தீவிபத்து காரணமாக வீட்டில் உள்ள பொருட்கள் முற்றாக தீயில் எரிந்து சாம்பலாகியுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
இவ் வீடானது தம்பாளையில் திருமணம் முடித்துள்ள ஓய்வு பெற்ற ஆசிரியர் ஜுனைத் என்பவருடையதாகும்.
இவ் வீட்டை அக்பர் என்பவருக்கு கடந்த 15 வருடமாக வாடகைக்கு
கொடுத்திருக்கிறார்.
சகோதரர் அக்பர் மற்றும் மனைவி பிள்ளைகளுன் நேற்றிரவு தம்பாளைக்கு சென்றிருந்ததால் வீட்டில் யாரும் இருக்கவில்லை.
இதனால் உயிர்ச்சேதங்கள் இல்லை





