திருகோணமலை மாவட்ட முஸ்லிம்களின் காணிப் பிரச்சினைகள். நூல் வெளியீடு

0


நூலாசிரியர் லரீப் சுலைமான் அவர்களுக்கு நன்றிகள். 
***********
அம்பாறை மாவட்டம் இறக்காமத்தைச் சேர்ந்த சகோதரர் லரீப் சுலைமான் அவர்களின் கள ஆய்வுப் பின்னணியில் கிடைத்த முன்மொழிவுகளை நூல் வடிவிலே தொகுத்து அந்த நூலை திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா நகரில் கடந்த  சனிக் கிழமை வெளியிடப்பட்டது. 

திருகோணமலை மாவட்டத்தின் காணிப்பிரச்சினையை அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த ஒருவரினால் தொகுக்கப்பட்டு அதன் வெளியீட்டை கிண்ணியா நகரிலே தேசியத் தலைவர் றிஷாட் பதியுதீன் அவர்களினால் வெளியிட்டமைக்கு சகோதரர் லரீப் சுலைமான் அவர்களுக்கும் அம் மாவட்டத் தலைவர் அப்துல்லாஹ் மஹ்றூப் மற்றும் சூறா சபையினருக்கும் திருகோணமலை மாவட்ட முஸ்லிம்களின் சார்பாக பலகோடி நன்றிகளை தெரிவித்தனர்.

வரலாற்று ஆவணமான இந்நூலை பல கள ஆய்வுப் பயணங்களை மேற்கொண்டு செய்திருக்கும் இப்பணிமூலம் விடுவிக்கப்படவேண்டிய,பாதுகாக்கப்பட வேண்டிய பல காணிப் பிரச்சினைகளை இனங்காட்டியுள்ளார்.

இந்நூல் நம் எல்லோரினதும் கைகளில் இருக்க வேண்டிய  ஒரு ஆவணம். என்பதுடன் இந்நூலாசிரியருக்குத் தேவையான சகல ஒத்துளைப்புக்களையும் செலவுகளையும் தான் முடிந்தவரை பொறுப்பேற்றுக் கொள்வதாகவும்.
இன்நூலின் 400 பிரதிகளைத் தான் வாங்கித் தருவதாகவும் திருகோணமலை மாவட்டத்திலுள்ள அனைத்து நூலகங்களுக்கும் இலவசமாக வழங்க வேண்டும் எனவும் பிரதியமைச்சரிடம் தேசியத் தலைமை வேண்டிக்கொண்டது.

திருகோணமலை மாவட்ட காணிப்பிரச்சினையோடு மாத்திரம் நின்று விடாமல் அம்பாறை, மட்டக்களப்பு,வடபகுதி என அனைத்து பகுதிகளிலுமுள்ள காணிப் பிரச்சினையை ஒன்று சேர்த்து நூல்வடிவில் வெளியிட முயற்சிக்குமாறும் அவற்றுக்கான அனைத்து உதவிகளையும் தான் பொறுப்பேற்பதாகவும் தேசியத் தலைவர் உறுதியளித்தார்.

இறுதியில் தேசியத் தலைவரினால் நூலாசிரியருக்கு பொன்னாடைபோற்றி கௌரவமும் வழங்கப்பட்டது.




Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top