அமெரிக்கா இலங்கையில் நிரந்தர இராணுவத்தளம்? அமெரிக்க தூதுவரின் அதிரடி அறிவிப்பு!

0

இலங்கையுடன் இராணுவ ரீதியான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கு இலங்கையில் நிரந்தரமான இராணுவத்தளம் அமைக்கப்போவதாக வெளிவரும் செய்திகளில் உண்மை இல்லையென அமெரிக்கா அதிரடியாக தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரக பேச்சாளர் ஒருவர் அமெரிக்கா இலங்கையில் நிரந்தர இராணுவத்தளத்தை அமைக்க திட்டமிடுவதாக தெரிவித்து வெளிவரும் செய்திகள் குறித்து மேற்கண்டவாறு கருத்து தெரிவித்திருந்தார்.
தொடர்ந்தும் கருத்துத்தெரிவித்த அவர்,
எதிர்காலத்தில் இங்கு அமெரிக்காவின் எந்தவொரு நிரந்தர தளத்தையும் அமைக்கும் திட்டங்கள் எதுவும் இல்லையென தெரிவித்ததோடு, திருகோணமலை துறைமுகத்தில் அமெரிக்க விமானந்தாங்கி கப்பல்கள் எதுவும் தரித்து நிற்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். விமானந்தாங்கி கப்பல்கள் இலங்கைக்கு வரும் திட்டம் எதுவும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையுடன் இராணுவ ரீதியான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கு அமெரிக்கா முயற்சிக்கின்ற போதிலும், இங்கு இராணுவத்தளத்தை நிரந்தரமாக அமைப்பதற்கு எந்தவொரு திட்டமும் இல்லை என தெரிவித்துள்ளார். அவ்வாறான திட்டம் ஒருபோதும் தமது பாதுகாப்பு ஒத்துழைப்பின் அங்கமாக இருக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்
அத்தோடு எந்த நேரத்திலும், அமெரிக்க கடற்படைக் கப்பல்கள் இலங்கைக்கு வரக்கூடியளவுக்கு இலங்கை அதிகாரிகளுடன் நெருக்கமாகப் பணியாற்றுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top