சம்மாந்துறையில் 320 வீடுகளைக் கொண்ட மாதிரி வீடமைப்புத் திட்டம்

0

சம்மாந்துறை பிரதேசத்தில் வீடுகளின்றி அவல நிலையில் வாழும் ஏழை மக்களின் நலன் கருதி 320 வீடுகளைக் கொண்ட மாதிரி வீடமைப்புத் திட்டமொன்றை வீடமைப்பு, நிர்மாணத்துறை அமைச்சின் மூலம் மேற்கொள்ளப்படவுள்ளதோடு, முதற்கட்டமாக சம்மாந்துறை மலையடிக்கிராமம் மற்றம் செந்நெல் கிராமங்களில் விரைவில் இதன் நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.  என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூரின் முயற்சியினால் வீடமைப்பு, நிர்மாணத்துறை அமைச்சினால் சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட புதிய வளத்தாப்பிட்டி, இஸ்மாயில்புர கிராமத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள 30 வீடுகளைக் கொண்ட மாதிரிக் கிராம வீடமைப்புத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று(31) தேசிய வீடமைப்பு அதிகார சபையின் கல்முனைப் பிராந்திய மேலதிக முகாமையாளர் தலைமையில் ஏ.எம்.இப்றாஹீம் இடம்பெற்றது. இந்நகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.





Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top